/* */

மோசடிகள் பலவிதம் அதில் இது புதுவிதம். பறிபோனது பல கோடி ரூபாய்

Today Crime News in Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மோசடிகள் பலவிதம் அதில் இது புதுவிதம். பறிபோனது பல கோடி ரூபாய்
X

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த பெண்கள்.

Today Crime News in Tamil -திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால் பகுதியில் ஒரு தனியார் சேவை மையம் செயல்படுகிறது. இந்த மையம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் என்.ஜி.ஓ அமைப்பினரை செயல்படவைத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருவர் இருந்தனர்.

இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு சேலை, தங்க மூக்குத்தி, ஆடுகள் வழங்குவதாகவும், கணினி பயிற்சி, அழகு கலை பயிற்சி, தையல் பயிற்சி ஆகியவற்றை வழங்க உள்ளதாகவும், குறிப்பாக கடன் உதவி செய்து தருவதாகவும், பொதுமக்களிடம் கூறி உள்ளனர். இதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்துள்ளனர்.இதில் பலரை உறுப்பினராக சேர்த்துள்ளனர். அதற்கு ஒருநபரிடம் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் எந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறார்களோ அதில் இணைய வேண்டும். அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

4 ஆடுகள் வேண்டுமா? மாதம் 1,600 ரூபாய் கட்டுங்க", தினசரி 50 ரூபாய் கட்டினால் சேலை, மூக்குத்தி, மாதம் 10 ஆயிரம் கட்டினால் ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் என இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறி உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக் கணக்கான பெண்கள் பணம் கட்டி சேர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஸ்டார் பவுன்டேஷனின் நிறுவன இயக்குநர்களான இளவரசி, அவரது கணவர் ஜெயராமன் இருவரும் சென்று 50 பேர், 60 பேருக்கு புடவை, மூக்குத்தி தருவது, ஆட்டுக்குட்டி தருவது எனச்செய்துள்ளனர்.

இதை நம்பிய ஏஜெண்டுகள் மக்களிடம் பணம் வசூலித்து மாதம் தவறாமல் கட்டி வந்த நிலையில்தான், நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திடீரென கம்பி நீட்டி உள்ளனர். அண்மையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்களும் ஏஜெண்டுகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

பணத்தை இழந்த பொதுமக்கள் ஏஜெண்டுகளிடம் பணத்தை திருப்பிக் கேட்டதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏஜெண்டுகள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிறுவனத்திற்காக வசூலித்த பணத்தை திருப்பி அளிக்க கோரி ஏஜெண்டுகளான தங்களை, கட்டாயப்படுத்துவதாகவும், நீதிமன்றத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், கண்ணீர் வடிக்கும் ஏஜெண்டுகள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த மோசடி தமிழ்நாடு முழுவதும் பெண்களை குறிவைத்து நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான கணவன் – மனைவி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

மேலும் தமிழக முழுவதும் இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே மோசடி தொகை எவ்வளவு என்பது தெரியவரும்., காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Sep 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!