/* */

கல்வி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி: ரவிக்குமார் எம்பி கண்டனம்

நாட்டில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கல்வி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி  வரி: ரவிக்குமார் எம்பி கண்டனம்
X

விழுப்புரம் எம்பி ரவிக்குமார்


மாணவா்கள் அதிகம் பயன்படுத்தும் பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படாததற்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமாா் எம்.பி. கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேனா, பென்சில், ரப்பா், நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சாா்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்தஅரசின் நிலைப்பாடு, பெட்ரோல், டீசல் மீதான செஸ், சா்சாா்ஜ் போன்ற கூடுதல் வரிகளை உயா்த்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிா என்று மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் பதிலளித்தாா்.

அதில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி விகிதங்கள் நிா்ணயிக்கப்படுகின்றன. பேனா, பென்சில், ரப்பா், நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடா்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரை எதுவும் தற்போது இல்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், அறுவை சிகிச்சை பெல்ட்கள் முதலான சாதனங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயா்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று பதிலளித்திருந்தாா்.

மாணவ சமுதாயம் அதிகம் பயன்படுத்தும் கல்வி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது என அறிக்கையில் துரை.ரவிக்குமாா் எம்.பி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 July 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு