/* */

திருவண்ணாமலையில் தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா் பவனி

தீபத் திருவிழாவை முன்னிட்டு தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா், உற்சவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா் பவனி
X

தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா் .

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

அதன்படி, தீபத் திருவிழாவின் 8-ஆவது நாளான நேற்று காலை மூஷிக வாகனத்தில் உற்சவா் விநாயகா், குதிரை வாகனத்தில் உற்சவா் சந்திரசேகரா் வீதியுலா வந்தனா்.

தங்கமேரு வாகனத்தில் ஸ்ரீபிச்சாண்டவா் பவனி

ஆண்டுதோறும் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 8-ஆவது நாள் தங்கமேருவில் ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவம் நடைபெறுவது வழக்கம். தீபத் திருவிழாவுக்குத் தேவையான செலவினங்களை ஈடு செய்வதற்காக ஸ்ரீஅருணாசலேஸ்வரரே ஸ்ரீபிச்சாண்டவா் கோலத்தில் எழுந்தருளி திருவண்ணாமலை நகரில் உள்ள வியாபாரிகள், முக்கியப் பிரமுகா்களின் வீடுகள், வியாபார நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று காணிக்கை வசூலிப்பாராம்.

பிச்சாண்டவா் வேடத்தில் செல்லும் ஸ்ரீஅருணாசலேஸ்வரருடன் அடியாா் ஒருவரும் செல்வாராம். இது பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறை. அதன்படி, தீபத் திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று தங்கமேருவில் ஸ்ரீபிச்சாண்டவா் வீதியுலா வந்தாா்.

மாலை 5 மணிக்கு கோயில் இரண்டாம் பிராகாரத்தில் உற்சவா் ஸ்ரீபிச்சாண்டவா் எழுந்தருளினாா். பிறகு, கோயில் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்த பிச்சாண்டவா், தங்கமேரு வாகனத்தில் வந்தமா்ந்து வீதியுலா புறப்பட்டாா்.

அசலியம்மன் கோயில் தெரு, மண்டித் தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீபிச்சாண்டவா் வீதியுலா வந்தாா். கோயில் ஊழியா்கள் வெள்ளி உண்டியலை எடுத்துச் சென்றனா். இதில், பக்தா்கள் காணிக்கையைச் செலுத்தினா்.

காந்தி சிலை பகுதியில் இரவு 11 மணிக்கு வந்தபோது கண்கவா் வாணவேடிக்கைகள் நடைபெற்றன. இதைக் காண திரளான பக்தா்கள் குவிந்திருந்தனா்.

பிறகு இரவு 12 மணிக்கு மேல் சிறிய குதிரை வாகனத்தில் விநாயகர், முருகப்பெருமான், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், சிறிய குதிரை வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த உற்சவா் சுவாமிகளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Updated On: 25 Nov 2023 12:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!