/* */

விவசாய கடன் அட்டை பெற 24 முதல் 1-ந்தேதி வரை சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற வருகிற 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விவசாய கடன் அட்டை பெற 24 முதல் 1-ந்தேதி வரை சிறப்பு முகாம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற வருகிற 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்ற சிறப்பு முகாம் நாடு முழுவதும் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மே மாதம் 1-ந் தேதி வரை நடக்க உள்ளது.

முகாமில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான பால் பண்ணை, கால்நடை பராமரித்தல் மற்றும் மீன் வளர்த்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடன்களுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், மேலும் பால் பண்ணை, கால்நடை பராமரித்தல் மற்றும் மீன் வளர்த்தல் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெறமுடியும்.

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் முறையாக தவணையில் தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை எவ்வித பினையமுமின்றி கடன் வழங்கப்படும்.

விவசாய கடன் அட்டை, கடன் பெற விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

விவசாயிகள் பூர்த்தி செய்த கடன் விண்ணப்பம் மற்றும் இணை ஆவணங்களுடன் நேரடியாக வங்கி கிளைகளில் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாகவோ அல்லது மாவட்ட விவசாயத்துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், கால்நடை மருத்துவத்துறை அலுவலகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், அரசு பொது கணினி சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தொடர்பு கொண்டு கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் 24-ந் தேதி முதல் மே மாதம் 1-ந் தேதி வரை நடக்க உள்ள இச்சிறப்பு முகாமில் விவசாய கடன் அட்டை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் மாவட்ட வளர்ச்சி அதிகாரி நபார்டு ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 April 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?