/* */

ஒலி,ஒளி அமைப்பினர் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகேட்டு மனு

ஒலி,ஒளி அமைப்பாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஒலி,ஒளி அமைப்பினர்  கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகேட்டு மனு
X

திருவண்ணாமலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் விலக்கு கேட்டு ஒலி.ஒளி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

ஒலி ஒளி அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், பந்தல் மேடை அமைப்பாளர்கள் வாடகை பாத்திர பொருட்கள் உரிமையாளர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என இவர்களை சார்ந்துள்ள சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொரோனா இரண்டாவது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த ஊரடங்கு உத்தரவினால் மேடை ஒலி ஒளி அமைப்பாளர்கள் சமையல் கலைஞர்கள் வாடகை பாத்திரம் பொருட்கள் உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் வாழ்வாதாரம் இழந்து இருந்த சூழ்நிலையில் தற்போது தான் அதிலிருந்து மீண்டு வர தொடங்கியதாகவும்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், வாடகை பாத்திரம் பொருட்கள் உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் இவர்களை சார்ந்து தொழில் செய்பவர்கள் 5 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகவும், மீண்டும் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது விழாக் காலம் என்பதால் இந்த சூழ்நிலையில் திருவிழா நிகழ்வுகளை தடை செய்தும் திருமண விழாக்களில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மீண்டும் தங்களை பாதாளத்துக்கு தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்களை நடத்திக் கொள்ளவும், அரங்குகள் மற்றும் மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50% நபர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்குமாறு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

Updated On: 19 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!