/* */

துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்க அழைப்பு
X

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருகிற 29ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுடில்லியில் இயங்கும் தேசிய துப்புரவு பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை வருகை தர உள்ளார்.

அப்போது உள்ளாட்சி அமைப்புகள் ,இதர துறைகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணி செய்யும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டம் அமல்படுத்துவது குறித்தும் பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே துப்புரவு பணியாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Dec 2021 1:50 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்