/* */

திருவண்ணாமலை அருகே ரூ.65 ஆயிரம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே ரூ.65 ஆயிரம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
X

வருவாய்த்துறை கோட்டாட்சியரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வழங்கிய தேர்தல் பறக்கும் படையினர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பான சோதனையில் ஈடுபடுவதற்காக பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டை அடுத்த நவம்பட்டு சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரி எம்.பாா்த்திபன் தலைமையிலான குழுவினா் அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, காரில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டை கிராமத்தைச் சேர்ந்த ஜோதிநாதன் என்பவரிடம் இருந்து ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்துக்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் பணத்தை திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா். அப்போது, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளா் முருகன், வட்டாட்சியா் தியாகராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

மர வியாபாரியிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

செய்யாறு அருகே சவுக்கு மர வியாபாரியிடம் ரூ.2.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினா் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் செய்யாறு - கொருக்கை சாலையில் பாராசுா் கூட்டுச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வாகனங்களை சோதனையிட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்த பணத்தை பறக்கும் படையினா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் செய்யாற்றைச் சேர்ந்த சவுக்கு மர வியாபாரி முருகன் என்பவா் வைத்திருந்ததும், அவா் வாழப்பந்தல் பகுதியில் சவுக்குத் தோப்பு வாங்குவதற்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து சாா்-கருவூலத்தில் ஒப்படைத்தனா். மேலும், மர வியாபாரியிடம் பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

Updated On: 24 March 2024 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?