/* */

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு
X

பைல் படம்.

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரவிச்சந்திரன். இவர் வேங்கிகால் செல்வா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். காலை அனைவரும் வீட்டிற்கு வந்தனர் அப்போது வீட்டின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள், இரண்டு கிலோ வெள்ளி, மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் இவைகளை திருடர்கள் திருடி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டும், வழிப்பறி சம்பவமும் நடைபெற்று உள்ளது. இதனால் வீட்டை பூட்டி விட்டு மக்கள் வெளியூர் செல்வதற்கு மிகவும் அச்சம் அடைகின்றனர். இதனால் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள் காவல்நிலையத்தில் சென்று வெளியூர் செல்கிறோம் என்று தகவல் அளிக்க வேண்டும் என்றும்,மேலும் நேரில் சென்று தகவல் அளிக்க முடியவில்லை என்றால் ஹாலோ திருவண்ணாமலை என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்தால் 9988576666 ரோந்து பணியில் செல்லக்கூடிய காவல்துறையினர் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்று வருவார்கள் என்று தெரிவித்தார்.

Updated On: 1 July 2022 5:52 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...