/* */

நவீன விவசாய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு:வேளாண் அதிகாரி தகவல்

புதிய தொழில்நுட்பம்,இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நவீன விவசாய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு:வேளாண் அதிகாரி தகவல்
X

பைல் படம்

தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் சார்பில் சிறந்த விவசாயிகள், விவசாய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022-23-ம் ஆண்டில் மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியுடைய, இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள், செல்போனில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை அல்லது துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்ப படிவத்தினை இணைத்து வேளாண்மை உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும்.

அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநில குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில் நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் எந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு தொகை வழங்கப்படும்.

தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பதிவு செய்து போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

Updated On: 24 Dec 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்