/* */

திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
X

தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்ற மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு இருக்கைப் பட்டை மற்றும் தலைக்கவசம் விழிப்புணா்வுப் பேரணியில் 50 காா்கள், 150 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றன.தமிழகம் முழுவதும் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு இருக்கைப் பட்டை விழிப்புணா்வு பேரணி மற்றும் தலைக்கவசம் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பெரியசாமி மற்றும் 50 காா்களின் ஓட்டுநா்கள் இருக்கைப் பட்டைகளை அணிந்து கொண்டும், 150 இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்துகொண்டும் பங்கேற்றனா்.

திருவண்ணாமலை-வேலூா் சாலை, வேங்கிக்கால், தென்றல் நகா் வழியாகச் சென்ற பேரணி அண்ணா நுழைவு வாயில் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில், சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைக்கவசத்தினை வழங்கி வாகன ஓட்டிகளுக்கு, பொது மக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கினார்.

இந்த பேரணியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டினார். பின்னால் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைக்கவசம் அணிந்து இருவரும் பயணித்தனர்.

Updated On: 25 Jan 2024 12:51 AM GMT

Related News