/* */

4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது

திருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வழக்கில்,  ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது
X

ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட நபர், அவர் பயன்படுத்திய கண்டெய்னர் லாரியுடன் தனிப்படை போலீசார்

திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோந்தவரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.

திருவண்ணாமலை, கலப்பாக்கம், போளூா் ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் உள்பட 4 ஏடிஎம் மையங்களில் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த இயந்திரத்தை உடைத்து ரூ.72.78 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதனைடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து தனிப்படை போலீசார் கர்நாடகா, அரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இந்த வழக்கில் தொடா்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சோந்த முகமது ஆரிப் (35), ஆஜாத் (37) ஆகியோரை பிப்ரவரி 17-ம் தேதியும், கா்நாடக மாநிலம், கோலாரைச் சோந்த குதரத் பாஷா (43), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோந்த அப்சா் உசேன் (26) ஆகியோரை பிப்ரவரி 21-ம் தேதியும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், வழக்கில் தொடா்புடைய 5-வது நபரான கா்நாடக மாநிலம், கோலாரைச் சோந்த நிஜாமுதீன் (37) கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டாா். இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, ரூ.5 லட்சம் ரொக்கம், 2 காா்களை பறிமுதல் செய்தனா்.

6-வது நபா் கைது

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய 6-வது நபரான ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாா் மாவட்டம், திஜாரா வட்டம், ஜவாந்தி குா்த் கிராமத்தைச் சோந்த சிராஜுதினை (50) திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசங்கரன் தலைமையிலான தனிப் படை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.

கா்நாடக மாநில எல்லை அருகே கைது செய்யப்பட்ட இவரையும் , கொள்ளையடித்த பிறகு தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லாரியையும், போலீஸாா் பறிமுதல் செய்து திருவண்ணாமலைக்குக் கொண்டு வந்தனா்.

பின்னா், நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிபதி கவியரசன் முன்னிலையில் சிராஜுதீனை போலீஸாா் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Updated On: 17 March 2023 10:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...