/* */

புரட்டாசி மாத பவுர்ணமி; அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில், அண்ணாமலையார் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

புரட்டாசி மாத பவுர்ணமி; அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
X

கிரிவலப் பாதையில்,  சைக்கிளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மற்றும் எஸ். பி

திருவண்ணாமலையில் மலையையே, சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி, பவுர்ணமி நாளில் மட்டுமின்றி விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை, சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபடுவர்.

ஆவணி மாத பவுர்ணமி திதி, 9-ம் தேதி அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி, மறுநாள் (10-ம் தேதி) அதிகாலை 3.11 மணி வரை இருந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை முதல், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு மேல், கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால், கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது.நேற்று மாலை முதல், அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது மழையையும் பொருட்படுத்தாமல் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

கிரிவலப் பாதையில், அன்னதானம் செய்பவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான கடிதம் அளித்து அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தான் அன்னதானம் செய்ய வேண்டும். அனுமதி இன்றி யாரேனும் அன்னதானம் வழங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவித்திருந்தார்.

இம்முறை அன்னதானம் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடைபெற்றது. இதனால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் முறையான குடிநீர் வசதி தற்காலிக குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கலெக்டரின் இந்த முயற்சிக்கு பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வரும் கார்த்திகை தீப திருநாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவர் அப்போது கூடுதலாக அன்னதானம் செய்ய இடங்கள் ஒதுக்கி தர வேண்டும் என அன்னதானம் வழங்கும் குழுவினர்கள் கேட்டுக் கொண்டனர்.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சைக்கிளில் ஆய்வு நடத்திய கலெக்டர்:

நேற்று இரவு, 7:30 மணி அளவில் திடீரென்று கலெக்டர் முருகேஷ், மாவட்ட எஸ்.பி கார்த்திகேயனுடன் இணைந்து, பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் கலெக்டர் மற்றும் எஸ் பி ஆய்வு பணியை மேற்கொண்டனர் பாதுகாப்பு பணிகள் குறித்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது பக்தர்களிடம் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்தார். மேலும் பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள, கோவில் அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.

பின்பு கிரிவலப் பாதையில் அன்னதானம் நடைபெறும் இடங்கள், கிரிவலப் பாதை ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி சைக்கிளில் சென்று ஆய்வு செய்தனர். அன்னதானம் செய்பவர்களிடம், உடனடியாக அந்த இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பக்தர்களிடம், கிரிவலப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 10 Oct 2022 12:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்