/* */

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்று, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல்
X

கலெக்டர் அறிவிப்பு ( கோப்பு படம்- ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை)

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வருகிற மே மாதம் 29-ம் தேதி வரை ராபி 2022-23-ம் ஆண்டிற்கு பருவத்திற்கு உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.66-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முன்பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகலுடன் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

உளுந்தூர்பேட்டை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல அளவிலான தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற மார்ச் 20ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ,அரியலூர் ,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்ப உள்ளனர்.

என் சி வி டி மற்றும் எஸ் சி வி டி முறையில் அரசு மற்றும் தனியார் ஐஐடியில் 2020 முதல் 22 வரை பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தொழிற்பழகுநர்ராக பயிற்சியில் சேரலாம்.

ஐஐடியில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8,10,12 ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலையில் சேர்ந்து மூன்று முதல் ஆறு மாத கால அடிப்படை பயிற்சியும் , ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இதற்கு உதவி தொகையாக ரூபாய் 6000 முதல் 14000 வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

இம்முகாமிற்கு வருகை தரும் பயிற்சியாளர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 March 2023 1:47 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...