/* */

திருவண்ணாமலை மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம்

அண்ணாமலையார் கோவில் மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தகவல்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம்
X

எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதிய மின்விளக்குகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவிதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அதிக மழை பெய்யும். மழையினால் ஏற்படும் சேதங்களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ள சேதம் ஏற்படாத வகையில் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை நகரை சுற்றியுள்ள 4 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. ஏரி நீர்செல்லும் கால்வாய்கள், சிறு பாலங்களை தூர்வாரி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒருவாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவில் 4 மாடவீதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாடவீதிகளில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு கட்டர் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த பணிகள் ஓராண்டுகள் நிறைவேற்றப்பட்டு, அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

முன்னதாக திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி பூமாலை வணிக வளாகத்தில் அருகில் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதிய மின்விளக்குகளை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் 60 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Oct 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...