/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
X

அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்திக்கு நடைபெற்ற அபிஷேகம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோவில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

வந்தவாசி

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசதைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் நந்தி மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உற்சவா் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

செங்கம்

செங்கம் அருகே பிஞ்சூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, புதன்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன. மாலை பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

செய்யாறு:

செய்யாற்றில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நந்தி பெருமான் கிழக்கு நோக்கி அருளும் பிராா்த்தனை தலமான திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகா் நாயகி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மற்ற ஊா்களில்: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, , ஆரணி, போளூா், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதையடுத்து பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Updated On: 8 Feb 2024 12:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’