/* */

தடையின்றி மண் எடுக்க தொழிலாளர்கள் அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் தடையின்றி மண் எடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

தடையின்றி மண் எடுக்க தொழிலாளர்கள் அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
X

 தொடர்ந்து வேலை செய்ய தடையின்றி மண் எடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர் 

மண்பாண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய தடையின்றி மண் எடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ஐ.டி.யு. சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகலாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் ஆண்டுக்கு 800 வண்டிகள் மண்பாண்ட தொழிலாளர் மண் எடுக்க உத்தரவு இருந்தும், வருவாய்த்துறையினரும், போலீசாரும் மண் எடுக்கச் சென்றால் வழக்குப் போடுவது, சிறையில் அடைப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

அதனால், மண்பாண்டம், நாட்டு செங்கல், நாட்டு ஓடு ஆகிய தொழில் செய்யாமல் வாழ்வாதாரத்தை இழந்து வேலையின்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய தடையின்றி மண் எடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Updated On: 15 Feb 2022 6:07 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு