/* */

இனி PMK 2.0 அரசியல்: அன்புமணி ராமதாஸ் அதிரடி

புதிய உத்வேகம், புதிய திட்டங்கள், புதிய மாற்றம். இனி PMK 2.0 அரசியல் என அன்புமணி ராமதாஸ் அதிரடி திட்டம்

HIGHLIGHTS

இனி PMK 2.0 அரசியல்: அன்புமணி ராமதாஸ் அதிரடி
X

அன்புமணி ராமதாஸ்

பாமக சார்பில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டம் இன்று திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கட்சித் தொண்டர்களிடம் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அனைத்து சமுதாய மக்களும், சாதி மத பேதமின்றி பாமகவுக்கு வேண்டும். நாம் யாருக்கும் எதிரியல்ல, தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் எங்கு சென்றும் பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் தற்போது புதிய உத்வேகத்துடனும், புதிய அரசியலுடனும், புதிய திட்டங்களுடனும் புதிய மாற்றங்களுடனும் புதியதாக PMK 2.0 என்ற முறையில் அரசியல் செய்ய உள்ளேன். அதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தான் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

விரைவில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 100% நமக்கு நிச்சயம் கிடைக்கும். தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் விளங்கி வரும் நிலையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக மாவட்டத்தில் சிப்காட் அமைக்க வேண்டும் என்பது எல்லோருடைய எண்ணமாக இருந்தாலும் விவசாய நிலங்களை அழித்து விட்டு சிப்காட் அமைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும், அதற்கு பதில் அரசு புறம்போக்கு நிலங்களில் சிப்காட் அமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மிகுந்த குழப்பத்துடன் தேர்வுகளை எதிர்நோக்கி வருகின்றனர். தமிழக அரசு நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Updated On: 23 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்