/* */

மக்கள் குறைதீா் கூட்டத்தில், 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணை

மக்கள் குறைதீா் கூட்டத்தில், 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணையை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

HIGHLIGHTS

மக்கள் குறைதீா் கூட்டத்தில், 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணை
X

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, உபகரணங்கள், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதன் மூலம் சுமார் 600-க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியா் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கருணை அடிப்படையில் ஒருவருக்கு கிராம நிா்வாக அலுவலருக்கான பணி ஆணை, 3 பேருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி ஆணைகளை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

தீக்குளிக்க முயற்சி:

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த முனியன் (வயது 48) தொழிலாளி. இவர் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், தானிப்பாடியை சேர்ந்த 2 பேர் சேர்ந்த எனது நிலத்தையும், வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அவர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுகின்றனர். இது குறித்து தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இதையடுத்து அவரை போலீசார் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போளூர் தாலுகா திரிசூர் கிராமம் எம்.ஜி.ஆர்.தோட்டம் இருளர் பகுதியை சேர்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

போளூர் தாலுகா திரிசூர் கிராமம் எம்.ஜி.ஆர்.தோட்டம் இருளர் பகுதியில் பல வருடங்களாக 17 பழங்குடி இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். தற்போது அந்த இடம் நீர்நிலை என அறிவித்து காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளனர். எனவே 17 இருளர் குடும்பத்தினருக்கும் மாற்று இடத்தில் வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சண்முகசுந்தரம், ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) கணேஷ், வருவாய் கோட்டாட்சியா்கள் வெற்றிவேல் (திருவண்ணாமலை), வினோத்குமாா் (செய்யாறு ) மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 19 July 2022 12:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு