/* */

சூரிய கிரகணத்தன்று அண்ணாமலையார் திருக்கோயில் நடை திறப்பு

Suriya Kiraganam -அக்னி ஸ்தலமான அருணாச்சலேஸ்வரர் கோவில் நடை சூரிய கிரகணத்தன்று திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Suriya Kiraganam -கிரகணம் என்பது வானில் தோன்றக் கூடிய ஒரு அதிசய நிகழ்வு ஆகும். இதனை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகையான கிரகணங்களாக நாம் சொல்கிறோம். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்று ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் நாம் கிரகண காலம் என்கிறோம். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வை தான் நாம் சூரிய கிரகணம் என்கிறோம்.

கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை தெரியும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும்

2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ம் தேதி வருகிறது. அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் பகல் 2.28 மணிக்கு துவங்கி, மாலை 6.32 வரை கிரகணம் உள்ளது. இதில் 4.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வழக்கமாக சூரிய கிரகணம் சந்திர கிரகண நாட்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலம் என்பதால் சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சந்திர கிரகணத்தின்போது, கிரகணம் முடியும்போதும், சூரிய கிரகணத்தின்போது கிரகணம் தொடங்கும் போதும் அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 25ம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் உதய நாழிகையில், திருக்கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.

அறிவியல் ரீதியாக கிரகண காலம் ஆகாதது என சொல்லப்பட்டாலும், வழிபாட்டிற்கு மிக உகந்த காலம் இந்த கிரகண காலம் தான். எந்த வழிபாட்டை இந்த சமயத்தில் நாம் மேற்கொண்டாலும் அதில் உயர்வான பலன் கிடைக்கும். தர்ப்பணம், தானம் போன்றவை இந்த காலத்தில் செய்யலாம். பொதுவாகவே கிரகண காலத்தில் தெய்வங்கள் ஆற்றல் இழந்து காணப்படும். அதனால் தான் கிரகண காலத்தில் கோவில் நடை சாற்றப்படுகிறது என்ற கூற்று ஒன்று உண்டு.

ஆனால் உண்மையில், உலகில் தீய சக்திகளை அழிக்க இறைவன், கதவடைத்து செய்யக் கூடிய அதீத உச்சநிலையில் இருப்பதை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக தான் கோவில்களில் கதவுகள் மூடப்படுகிறது. இதனால் தான் கிரகணம் முடிந்த பிறகு அபிஷேகம் செய்து குளிர வைத்து, சாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. ஆனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி ஸ்தலம் என்பதால் இங்கு மட்டும் நடை சாத்தும் வழக்கம் இல்லை. வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Oct 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...