/* */

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஜி ஆய்வு

Tiruvannamalai Today Live News-அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஜி ஆய்வு
X

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் 

Tiruvannamalai Today Live News-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.இதனால் அருணாசலேஸ்வரர் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கிரிவலப் பாதையில் உள்ள கடைக்காரர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்து பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் உங்கள் கடைக்குள்ளாராக பொருட்களை வைத்து வியாபாரம் செய்து கொள்ளுங்கள் உங்களை வருத்தப்படுத்துவது எங்கள் எண்ணம் அல்ல என்று கூறி அறிவுரை வழங்கினார்.

மேலும் நடைபாதையில் கடைகளை வைக்கக்கூடாது, அவ்வாறு நடைபாதையில் கடைகளை வைத்திருந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணிகளும் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தீபத் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் நேற்று பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிரிவலப் பாதையில் செல்லும் மக்களின் பாதுகாப்ப ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முடிவு செய்து இருந்தது.

அதனை தொடர்ந்து தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறையும் இந்த பௌர்ணமியில் பல இடங்களில் காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முன்னோட்டமாக பௌர்ணமி நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி சத்யபிரியா , திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் மற்றும் கிரிவலப் பாதையிலும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் சாமி சந்நிதி, அம்மன் சந்நிதி மற்றும் கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.

கார்த்திகை தீபத்தன்று வருகின்ற பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கிற நோக்கில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக ஐஜி கண்ணன் தெரிவித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 5:19 AM GMT

Related News