/* */

திருவண்ணாமலை நகராட்சியில் வரிகளை குறைக்க அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை

திருவண்ணாமலை நகராட்சியில் வரிகளை குறைக்கவேண்டும் என அமைச்சர் எவ வேலு கோரிக்கை வைத்து உள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சியில் வரிகளை குறைக்க அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை
X

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த தலைவர் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார். 

திருவண்ணாமலை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம் ஆகியோர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார் .நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோதி, கிரி , மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வரவேற்றார்

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது

திருவண்ணாமலை பாரம்பரியமிக்க புகழ்பெற்ற நகராட்சி , இந்த நகராட்சியின் தலைவராக பணியாற்றிய பலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ,சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இந்த நகராட்சியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பை பெற்றுள்ள நிர்மலா வேல்மாறனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

நகராட்சியில் 39 கவுன்சிலர்களும் இணைந்து பணியாற்றினாலதான் திருவண்ணாமலை நகரம் வளர்ச்சி பெறும்.

திருவண்ணாமலை நகராட்சியில் மாநகராட்சியை விட வரி அதிகமாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் முறையின்றி தாறுமாறாக வரி உயர்த்தப்பட்டது அதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நகராட்சி கடைகளின் வாடகையும் மிக அதிகமாக உள்ளது. எனவே நகர மன்றத்தின் முதல் கூட்டத்தில் வரியை குறைக்கவும் வாடகையை சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்து முதல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் திருவண்ணாமலை நகரம் வளர்ந்து இருக்கிறது மக்கள்தொகை பெருகியிருக்கிறது.எனவே தற்போது உள்ள குடிநீர் திட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 5.500 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளன. விரைவில் முதல்வர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார்.அதேபோல் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் விரைவில் அமைய இருக்கிறது என்றார்.

விழாவில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டி.வி.எம்.நேரு, நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 March 2022 3:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்