/* */

திருவண்ணாமலையில் தூய்மைக் காவலா்களுக்கு மருத்துவ முகாம்

திருவண்ணாமலையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தூய்மைக் காவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தூய்மைக் காவலா்களுக்கு மருத்துவ முகாம்
X

மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரிஷப்.

திருவண்ணாமலையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தூய்மைக் காவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலா் (சுகாதாரம்) மகாலட்சுமி தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் (நியமனம்) ராஜன்பாபு, திருவண்ணாமலை வேகன் ரோட்டரி சங்கத் தலைவா் சித்தாா்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூய்மை பாரத இயக்கத்தின் துரிஞ்சாபுரம் வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணன் வரவேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைக் காவலா்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்

முகாமில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் வட்டாரங்களில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள் 617 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முகாமில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம், பிரதம மந்திரி சுரஷக்சா பீமா யோஜனா திட்டம் ஆகியவற்றுக்கான அடையாள அட்டைகள், தாட்கோ நலவாரிய அட்டைகள், தூய்மைக் காவலா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் மருத்துவ விபத்து மற்றும் உயிர் காப்பீட்டு திட்ட பலன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தியன் வங்கி மூலம் மொத்தம் 33 தூய்மை காவலர்களுக்கும் காப்பீடு திட்டங்களில் இணைக்கப்பட்டனர்.

தொடர்ந்து அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை எஸ்ஆர்எம் மல்டி கேர் ஹாஸ்பிடல், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியோரின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் 90 தூய்மை காவலர்களுக்கு ரத்த வகையும், 16 நபர்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை அளிக்கப்பட்டது. மருத்துவரின் ஆலோசனையின் படியும் மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நிகழ்ச்சியில் தாட்கோ நிர்வாகம், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த அலுவலர்கள் , நகராட்சி துறை அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Feb 2024 1:32 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்