/* */

நவ 12 -ல் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை

Lok Adalat Cases -நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகத்தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும்

HIGHLIGHTS

நவ 12 -ல்  தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள்  விசாரணை
X

பைல் படம்

Lok Adalat Cases -திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 12-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெறுகிறது.

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகின்றது .

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாக தீர்வுகாணவும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. இதில், சட்டப் பணிகள் ஆணைக் குழு சட்டம் - 1987-ன் படி, பொதுமக்கள் தங்களது வழக்குகளை சமரசமாகத் தீர்த்துக் கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் படி தேசிய, மாநில, மாவட்ட, வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் செயல்படுகின்றன. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள கட்டணம் கிடையாது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் நீதிமன்ற கட்டணம் செலுத்தியிருப்பின், செலுத்திய முழுத் தொகையையும் மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 12ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெறுகிறது

மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடக்கிறது. இதில்,சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு , மின்சார பயன்பாடு , வீட்டு வரி , குடிநீர் வரி , ஜீவனாம்சம் , நில ஆக்கிரமிப்பு வழக்குகள் , தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள் , கல்விக் கடன் , வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வழக்காடிகள் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும் விரைவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதேபோல், மாவட்டத்தில் போளூர் , வந்தவாசி , செய்யாறு , ஆரணி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும், வரும் 12ம் தேதி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இழப்பீடு தொகை பிற பிரச்னைகளை இரு தரப்பினர் சம்பந்தத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்கிறது என்று திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஜமுனா தெரிவித்துள்ளார்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?