/* */

குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

குமாரபாளையத்தில், வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், பெயிண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
X

குமாரபாளையம் பகுதியில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

கடன் பிரச்னை விரக்தியில் பெயிண்டர் தற்கொலை

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசித்தவர் கோபாலகிருஷ்ணன், 56. பெயிண்டர். இவர் பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என தன் மனைவி கலைச்செல்வியிடம் பல முறை கூறியுள்ளதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் காலை 7:45 மணியளவில், வேலைக்கு செல்வதாக கூறினார். புறப்பட்டுச் செல்லும் போது, 'கடனை திருப்ப செலுத்த முடியாமல், விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டேன்' எனக் கூறிய அவரை, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

பள்ளிபாளையம் வட்டூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 51, விவசாயி. இவரும் எலச்சிபாளையத்தை சேர்ந்த தங்கவேலு, 61, இருவரும் உறவினரின் மகனுக்கு வரன் பார்ப்பதற்காக, ராயல் என்பீல்டு டூவீலரில் நேற்றுமுன்தினம் காலை 6:45 மணியளவில் குமாரபாளையம் சென்றனர். சேலம்- கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்கும் போது, எதிரில் டூவீலரில் வேகமாக வந்த நபர், இவர்கள் வாகனம் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். எதிரில் டூவீலர் வாகனத்தில் வந்தவரும் படுகாயமடைந்தார். ஈரோடு தனியார் மருத்துவ மனையில் மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசார் விசாரனையில், விபத்தில் காயமடைந்த மற்றொருவர், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையை சேர்ந்த மணிசேகர், 25, என்பது தெரியவந்தது.

நகை, பணம் அபகரித்த மூவர் கைது

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தில் வசிப்பவர் கோபிநாத்,35. கிச்சன் வேர்ஸ் கடை உரிமையாளர். அக். 27 மாலை 5:30 மணியளவில் வாடிக்கையாளரை பார்க்க, குமாரபாளையம் வந்தார். அப்போது வலைதளத்தில் அறிமுகமான நபர் இவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, சேலம், கோவை புறவழிச்சாலை அருவங்காடு பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார். அங்கு சென்றதும், அங்கு டூவீலரில் நின்றிருந்த நபர், தான்தான் வர சொன்னதாகவும், அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு சென்று பேசலாம் என அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும், அங்கு மறைந்து இருந்த இரண்டு நபர்களுடன் சேர்ந்து, மூவரும், இவர் அணிந்திருந்த 3 தங்க செயின், வெள்ளி அரைஞான் கொடி, பாக்கெட்டில் வைத்திருந்த 18 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். கோபிநாத் பயந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அவர்கள் மேலும், மேலும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்ததால், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் காவேரி நகர், பவானி பாலம் செல்லும் பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவ்வழியே ஹோண்டா ஷைன், ஹோண்டா ஆகிய இரு வாகனங்களில் வந்த மூவரிடம் விசாரணை செய்தனர். அதில், கொள்ளையடித்த நபர்கள் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் விசாரணையில் அவர்கள் குமாரபாளையம், குள்ளங்காடு பகுதியை சேர்ந்த சி.சி.டி.வி. கேமரா ஒயரிங் வேலை செய்யும் யோகேஸ்வரன், 25, குமாரபாளையம், வ.உ.சி.தெருவில் டெய்லரிங் வேலை செய்து வரும் மணிகண்டன், 27, குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம், வேட்டி மடிக்கும் கூலி வேலை செய்து வரும் வினோத்குமார், 21, என்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.

காணாமல் போன லாரியை மீட்ட போலீசார்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 31.லாரி உரிமையாளர். அக்.25 அதிகாலை 2:45 மணியளவில், தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குமார் இதுகுறித்து புகார் கொடுத்தார். இதுகுறித்து, தனிப்படை போலீசார் காணாமல் போன லாரியை தேடி வந்தனர். நேற்று காலை 10 மணியளவில், காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது. காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு,24, லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ்,36, அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், 38, ஆகிய மூன்று பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். புகார் கொடுக்கப்பட்ட இரண்டு நாட்களில் காணாமல் போன லாரி மீட்கப்பட்டது.

கரும்பு லோடு லாரி மீது மற்றொரு லாரி மோதல்; இருவர் படுகாயம்

மத்திய பிரதேசம், ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 25. லாரியில், கடலை எண்ணை லோடு ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி சேலம்- கோவை புறவழிச்சாலையில் வந்தது. கத்தேரி பிரிவு பகுதியில் நேற்று அதிகாலை 1:40 மணியளவில் லாரி வந்து கொண்டிருந்த போது, சாலையின் ஓரமாக எவ்வித சிக்னலும் போடாமல் கரும்பு லோடு லாரி நின்று கொண்டிருந்தது. இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணை லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் ஸ்ரீநாத் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். பலத்த சேதமடைந்த நிலையில் ஓட்டுனரை வெளியே எடுக்க முடியாததால், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து போராடி ஓட்டுனரை வெளியே தூக்கி வந்தனர். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கரும்பு லோடு லாரியில் தூங்கி கொண்டிருந்த ஓட்டுனர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சிருவன்கூர் பகுதியினை சேர்ந்த செல்வம், 30, என்பவரும் காயமடைந்ததால் இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

செக் மோசடி வழக்கில் ஒருவர் கைது

குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 59. இவர் தொழில் தொடர்பாக, குமாரபாளையம் தெற்கு காலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு, 2006ல், 6 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்ததாக தெரிகிறது. வங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளது. இதனால் இதுகுறித்து நீதிமன்றத்தில் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி குமாரபாளையம் போலீசார் நடராஜனை கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

கோட்டைமேடு, ஈஸ்வரன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 51. இவருக்கும், எதிர் தரப்பினருக்கும் 2006ல் ஏற்பட்ட தகராறில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த கூளையன் (எ) குமார், 43, குமாரபாளையம் அருகே வளையக்காரனூரை சேர்ந்த வெங்கடேஷ்,45, ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இந்த வழக்கு நடந்து வந்த வேளையில், நீதிமன்ற உத்தரவின்படி இருவரையும், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. முருகேசன், பயிற்சி எஸ்.ஐ. ஐசக் பத்மநாபன் உள்ளிட்ட போலீசார் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 6 Nov 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!