/* */

வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி துவக்கம்
X

வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கி வைத்த கலெக்டர் 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது.

மேற்காணும் தேர்தல் பணிக்கென இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்தே வாக்களித்து பயன் பெற ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக 12-D படிவம் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி

திருவண்ணாமலையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் வழங்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை வேங்கிகால், பேருந்து நிலையம் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான விருப்ப படிவம் 12 D , திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.

தேர்தல் பணிக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 இல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 40 சதவீதத்துக்கு மேற்பட்ட மாற்று திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் எந்த தொகுதி வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் அனைவரும் அவர்கள் வீட்டிலிருந்து வாக்களித்து பயன்கிற ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக 12 D படிவம் அவர்கள் வது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கப்படும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவண்ணாமலை அஞ்சுகம் நகரில் கண்ணம்மாள் வயது 90 மற்றும் முருகர் கோவில் தெரு கருணாகரன் வயது 88 ஆகியோருக்கும் ஓம் சக்தி நகர் பிரதான சாலையில் மாற்றுத்திறனாளி பிரபு வயது 37 என்பவரது வீட்டில் நேரில் சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் 12 D படிவத்தினை வாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாதினி வட்டாட்சியர் தியாகராஜன் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2024 2:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?