/* */

திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா

Tiruvannamalai News - திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

Tiruvannamalai News
X

63 மூவர் ஆய்வு மையம் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Tiruvannamalai News - திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா நடைபெற்றது.

இந்திர விழாவில் டாக்டர் எ.வ.வே.கம்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தவர்கள் காலேஜ் ரவி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கார்த்திக் வேல்மாறல் தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரேம்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார் . விழாவிற்கான ஏற்பாடுகளை டி வி எம் நேரு செய்திருந்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் எ.வ.வே.கம்பன் பேசுகையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலிருந்தே இந்திர விழா நடைபெற்று வந்தது. இப்போது இந்த விழா நடைபெறுகிறது என்று கேட்டால் இல்லை.

மக்கள் எல்லா வளமும் பெற்று தானிய வளமும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்கின்ற அடிப்படையில் கொண்டாடப்பட்டது தான் இந்திர விழா. இந்திர விழா மருத நிலத்தில் ஒரு விழாவாக நடத்தப்படுகிறது.

கரிகாலச் சோழன் என்ற மன்னன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை நடத்தப் பட்டிருக்கிறது. இதற்கு அத்தாட்சி சிலப்பதிகாரம். பல ஆண்டு காலம் தாண்டி மருவி சேர சோழ பாண்டியர் காலத்திலேயே இந்திர விழா கொண்டாடப்பட்டது.

இந்திர விழாவானது அன்று போல் இப்போது அதைக் காண்பது அரிதாகிவிட்டது. இங்கே ஆன்மீக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது, அதை சிறப்பாக செய்து கொண்டிருப்பவர்கள் திமுக உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் தான்.

tiruvannamalai today live news

இந்த ஆன்மீக அரசியலை யார் தவறாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இன்று மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற மத்திய அரசுதான் பாரதிய ஜனதாக் கட்சியினர் தான்.

நமக்கெல்லாம் இந்திரனாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருபவர்கள் யார் என்றால் நம்மிடம் முன்னால் இந்திரன், இந்நாள் இந்திரன், எனும் இரண்டு பேர் இருக்கின்றார்கள். முன்னால் இந்திரன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் .

இந்நாள் இந்திரன் யார் என்றால் தமிழகத்தை தற்போது சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான்.

8 கோடி மக்களுக்கு வழி வழிகாட்டுகிற சூரியனாக ஒளிபாய்ச்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிற தலைவர் ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தி ன் அமைச்சர், இந்த மாவட்டத்தின் இந்திரன் அமைச்சர் வேலு வுக்கும் நாம் நன்றி செலுத்துவோம் என பேசினார்.

Updated On: 30 May 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...