/* */

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்: மாவட்ட ஆட்சியர்

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்: மாவட்ட ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றிடலாம்.

இந்த கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ.250 அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து வைப்பு தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றுக்கு 7.6 சதவீதம் வட்டி பெறலாம். இந்த திட்டத்தின் முதிர்வு தொகையில் 50 சதவீதம் வைப்பு தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம்.

முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரிவிலக்கு உண்டு. இந்த திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 30 May 2022 1:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?