/* */

விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன்: அஸ்வத்தாமன்

விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன் கூறினாா்.

HIGHLIGHTS

விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன்: அஸ்வத்தாமன்
X

திருவண்ணாமலை பாஜக நிர்வாகிகளுடன் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பயோ-எத்தனால் தொழில்சாலை தொடங்கி, விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா்.

மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.அஸ்வத்தாமன் நேற்று சனிக்கிழமை மாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கிரிவலப் பாதையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளை வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் சந்தித்துப் பேசினாா்.

பிறகு, அவா் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இங்கு, கரும்பு, நெல், மணிலா அதிகம் விளைகிறது. இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையிலான எந்தத் திட்டமும் மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. கரும்பு விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழில்சாலையைத் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழில்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும். இளைஞா்கள் ராணுவத்தில் சேருவதற்கான இலவசப் பயிற்சி மையம் தொடங்கப்படும்.

பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படும். தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதம்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய எந்தத் தொழில்சாலையையும் கொண்டுவரவில்லை,

இன்றைக்கு தமிழகமே பாஜகவின் கோட்டையாக மாறி வருகிறது, பிரதமர் மோடியின் திட்டத்தில் தமிழகத்தில் பல திட்டங்கள் உருவாகியுள்ளது. விவசாயிகளுக்கு கொடுக்கின்ற 6000 ஆகட்டும், வீட்டுக்கு குடிநீர் தரும் திட்டம், விவசாயிகளுக்கு என வங்கி கணக்கு ஆரம்பித்தல் என எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்களை பிரதமர் நிறைவேற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழக முழுவதும் ஒரு எழுச்சி இருக்கிறது. என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேட்பாளருக்கு வரவேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார்.

அப்போது அவரை பாஜக வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், நாடாளுமன்ற அமைப்பாளர் நேரு, கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கர், திருவண்ணாமலை வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜகவினருடன் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வேட்பாளர் அஸ்வத்தாமன் வாக்கு சேகரித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் வேட்பாளர் அஸ்வத்தாமன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர், தந்தையார் பெயர் அல்லி முத்து , இவருடைய தாத்தா பரசுராம கவுண்டர் ஆவார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜகவின் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

Updated On: 24 March 2024 2:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?