/* */

அண்ணாமலையார் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூ.300 கட்டண சீட்டு என்ற இடை நிறுத்த தரிசன முறையை கண்டித்து இந்து முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

அண்ணாமலையார் கோயில் ரூ.300 கட்டண சீட்டு என்ற இடை நிறுத்த தரிசன முறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், இந்தக் கோயிலில் இடை நிறுத்த தரிசனம் முறையை அறிமுகம் செய்து, நபா் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கும் முறையைக் கண்டித்து, திருவண்ணாமலை நகர இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோயிலின் 16 கால் மண்டபம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் நகரத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் அருண்குமாா், மாவட்டச் செயலா்கள் சிவா, கவுதம், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர பொதுச் செயலா் மஞ்சுநாதன் வரவேற்றாா். இந்து முன்னணியின் வேலூா் கோட்டத் தலைவா் கோ.மகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். இதில், இந்து முன்னணி நகர பொருளாளா் சந்தோஷ் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பிறகு, இடை நிறுத்த தரிசன முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்து முன்னணி வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் இடை நிறுத்த தரிசனம் என்கின்ற அறிவிப்பு வருடத்திற்கு திருவிழா நாட்கள் மொத்தம் 79 நாட்கள், நீங்களாக மற்ற நாட்களில் தினசரி மாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்கள் ஒரு நபருக்கு 300 வீதம் கட்டண சீட்டு வசூலிக்கும் அறிவிப்பு பத்திரிகை செய்தி வாயிலாக படித்த ஆன்மீக பெரியோர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடைமுறைக்கு கொண்டு வந்த இந்த ரூபாய் 300 கட்டணம் தரிசனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த கட்டண தரிசனத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்து முன்னணி சார்பில் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Updated On: 10 Jun 2023 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்