/* */

திருவண்ணாமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
X

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் போலீசார் மற்றும் ஊர் காவல் படையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர். ஈசான்ய மைதானத்தில் தொடங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மத்திய பஸ் நிலையம், பெரியார் சிலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதி, சின்னக்கடை வீதி வழியாக சென்று மீண்டும் ஈசான்ய மைதானத்தில் நிறைவடைந்தது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை விபத்து ஏற்பட்டு உயிருக்காக போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உயிர்காத்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த 4 பேருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் சாலையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சிலருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசும்போது

கடந்த 2021-22-ம் ஆண்டில் தமிழகத்தில் அதிகளவில் சாலை விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். இதை தடுப்பதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து எடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் மாவட்ட காவல் துறையினருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகன ஓட்டியும் மற்றும் பின் அமர்ந்து செல்பவரும் அவசியம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தயாளன், குணசேகரன், கோமளவள்ளி, தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 April 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!