/* */

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தொடங்கியதையடுத்து கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
X

குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் முருகேஷ்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து ரத்து செய்யப்பட்டன. எனினும், பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் மனுக்களை பெறாததால் பெட்டியில் மனுக்களை அளித்து வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை, சமீபத்தில் அறிவித்துள்ள தமிழக அரசு குறைதீர்வு கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி , கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி ஆட்சியர் கட்டா ரவி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகள் இடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்பு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் உடனிருந்தார்.

Updated On: 4 Oct 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!