/* */

அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

Vinayagar Chaturthi in Tamil - திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
X

பைல் படம் .

Vinayagar Chaturthi in Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் நீர் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த விழாவின்போது அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விழா குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9.8.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும். விநாயகர் சிலை வைக்க உள்ளவர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் https://Tiruvannamalai.nic.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி கலெக்டரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Aug 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?