/* */

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன

HIGHLIGHTS

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
X

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் படித்து முடித்தவர்களுக்கு காலிப் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 6 ஆயிரத்து 553 காலிப் பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 3 ஆயிரத்து 587 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி பயனடையும் வகையில் அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வார நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அல்லது அலுவலக தொலைப்பேசி 04175- 233381 என்ற எண்ணில் தங்களது பெயரினை வருகிற 18-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். என, கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Aug 2023 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு