/* */

திருவண்ணாமலையில் 63 நாயன்மார்கள் உற்சவம், வெள்ளி ரதம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் உற்சவம் மற்றும் வெள்ளி ரத உற்சவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் 63 நாயன்மார்கள் உற்சவம், வெள்ளி ரதம்
X

வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் உற்சவம் மற்றும் வெள்ளி ரத உற்சவம் நடைபெற்றது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 6-வது நாளான நேற்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவா் விநாயகா், வெள்ளி யானை வாகனத்தில் உற்சவா் சந்திரசேகரா், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும், சிவபெருமானுக்கு தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர், கண்ணப்ப நாயனார், சிறுதொண்டு நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 63 நாயன்மார்களை சுமந்து கொண்டு மாடவீதியுலா வருவர்.

அந்த வகையில், இந்த ஆண்டும் மாணவர்கள் 63 நாயன்மார்கனை சுமந்து மாடவீதியுலா வந்தனர்.

இரவு 10.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி விமானத்தில் சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தியம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த உற்சவா் சுவாமிகளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்:

திருவிழாவின் 7-ஆவது நாளான இன்று வியாழக்கிழமை (நவ.23) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்குகிறது. இந்தத் தேர் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்த பிறகு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் தொடங்குகிறது.

3-ஆவதாக மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தேரோட்டம் தொடங்குகிறது. 4-ஆவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரோட்டமும், இறுதியாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரோட்டமும் நடைபெறுகிறது.

சிமென்ட் சாலையில்...

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் தாா்ச் சாலைக்குப் பதிலாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தச் சாலைகளில் முதல்முறையாக பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Updated On: 23 Nov 2023 12:59 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...