/* */

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இணைந்து செயல்பட நீதிபதி அறிவுரை

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க  இணைந்து செயல்பட நீதிபதி அறிவுரை
X

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல், தீர்வுகாணுதல்  குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசும் தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி  

திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, காவல்துறை, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல், தீர்வுகாணுதல் ஆகியவை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள் தலைமை தாங்கினார். உமன் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் நேசகுமாரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, எஸ்பி பவன்குமார் ரெட்டி, மாவட்ட ஏ எஸ்பி ராஜாகாளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், பெண்கள் இன்று மட்டும் அல்ல பல நூற்றாண்டுகள் முன்பு இருந்தே போராட்டங்களை கையில் எடுத்து, அதில் பல வெற்றிகளையும் கண்டு உள்ளனர். பெண்களால் முடியாது என்பது எதுவும் இல்லை. தற்போது நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இதனை வரவேற்கிறேன்.

இயற்கையாகவே ஆண்களும், பெண்களும் சமநிலையில் உள்ளனர். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்

கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயகுமார், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அதிகாரி கோமதி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி எலிசபெத்ராணி, சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் தமிழரசன் நன்றி கூறினார்.

Updated On: 26 Feb 2022 1:43 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...