/* */

திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் மின் கம்பத்தில் பணியில் இருந்த தாற்காலிக ஊழியா் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலையில் மின் கம்பத்தில் பணியில் இருந்த தாற்காலிக ஊழியா், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமம், ஏரிக்கரை தெருவைச் சோந்த கண்ணன் மகன் முனியப்பன் (27), இவர் தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார்.

இவருடன் மின் வாரிய ஊழியா்கள் கமலேஷ், குமாா் ஆகியோா் சோந்து திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் , மின்கம்பத்திலிரூந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு திருவாண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், தனியார் மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரை தவறுதலாக இயக்கப்பட்டதா , அல்லது மின் மாற்றி களில் பழுது உள்ளதா என்பது குறித்தும் மின்சார வாரியத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின் கம்பத்திலேயே உயிரிழந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடம் அச்சத்தையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 11 Feb 2023 2:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்