/* */

தி.மு.க.வையும் வணிகர்களையும் பிரிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் 36-ம் ஆண்டு வணிகர் தின விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தி.மு.க.வையும் வணிகர்களையும் பிரிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
X

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் 36-ம் ஆண்டு வணிகர் தின விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் 36-ம் ஆண்டு வணிகர் தின விழா நடைபெற்றது. சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

திருவண்ணாமலை வணிகர் சங்கம் பெருமைவாய்ந்த சங்கமாகும். இந்த சங்கத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். இந்த சங்கத்தின் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 6 தீர்மானங்கள் பாராட்டும் தீர்மானங்களாக உள்ளது. மற்ற தீர்மானங்கள் வணிகர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. அதில் ஒன்று திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை வேண்டி உள்ளது. ரெயில் சேவை தொடங்க திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

என்னையும் வணிகர்களையும் பிரிக்க முடியாது. வணிகர்களின் வளர்ச்சிக்காக சங்கத்திற்கு ஏற்கனவே நான் ரூ.5 லட்சம் வழங்கி உள்ளேன். தற்போது அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வழங்குகிறேன். வணிகர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது வணிகர்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது முதலில் குரல் கொடுத்தோம். இதையடுத்து வந்த தேர்தலில் வணிகர் சங்கம் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று நடுநிலையாக இருந்தனர். ஆதரவு தெரிவித்த எங்களுக்கு அவர்கள் சாதகமாக இல்லை.

இதையடுத்து வணிகர் சங்கத்திற்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது அவர்கள் என்னை நாடினர். நான் அவர்களுக்கு உதவி செய்தேன். இதையடுத்து விக்கிரமராஜா தலைமையில் புதியதாக வணிகர் சங்கம் உருவானது. அதற்கு ஒரு காரணம் நானும் தான். ஆனால் திருவண்ணாமலை வணிகர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நானும் வணிகர் என்பதால் என்னையும் வணிகர் சங்கத்தையும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் வேண்டாம். தி.மு.க.வையும் வணிகர்களையும் பிரிக்க முடியாது.

திருவண்ணாமலை நாளுக்குநாள் வளர்ச்சி அடைகிறது. மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. எனவே அதை விரிவுபடுத்த வேண்டிய சூழல் உள்ளது. திருப்பதி போல் திருவண்ணாமலை கோவில் வீதிகளில் கான்கிரீட் சாலையாக அமைக்கப்படும். இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த சாலை தரமானதாகவும், உறுதியானதாகவும் அமைக்க வேண்டி பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு விமான ஓடுதளம் அமைக்கும் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. சாலை அமைக்க அனைத்து வணிகர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். திருவண்ணாமலைக்கு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது உள்ள பஸ் நிலைய வணிகர்கள் பாதிக்கப்பட்டார்கள். புதிய பஸ் நிலையம் மேற்பகுதியில் தங்கும் விடுதி வசதியும் அமைக்கப்பட உள்ளது. இது திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படும். மேலும் காந்திநகரில் உள்ள இடம் வணிகர்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநில மாநாடு

இந்த விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வணிகர்கள் பேரமைப்பு சார்பில் வருகிற மே மாதம் 5-ந் தேதி திருச்சியில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கு வணிகர்களின் விடியல் மாநாடு என பெயர் வைத்துள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் கலந்து கொள்ள உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநாட்டில் முதல் முறையாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். வணிகர்களின் மாநாட்டில் முதல்-அமைச்சர்கள் யாரும் கலந்து கொண்டது கிடையாது. வரலாற்றில் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து அவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேறும் மாநாடாக அமைய உள்ளது. தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

மதுவிலக்கு

தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று கூறியது வணிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வணிகர்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மதுவிலக்கிற்கு வணிகர் சங்கம் ஆதரவும் தெரிவிக்கிறது. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்துள்ளார்கள். எனவே பஜாரில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வருங்கால வைப்பு நிதியில் வட்டி குறைப்பு என்பது பல தரப்பில் எதிர்ப்பாகி உள்ளது. மத்திய அரசு துறை சார்ந்தவர்களை அழைத்துப் பேசி ஆலோசனை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன், துணை தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் தி.மு.க.வினர், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 6:20 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  3. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  5. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  6. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  7. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  9. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  10. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...