/* */

நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் விவரங்கள் வெளியிடப்படும்: ஆணையர்

திருவண்ணாமலை நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் விவரங்கள் வெளியிடப்படும்: ஆணையர்
X
பைல் படம்.

நகராட்சியில் சொத்து வரி, காலி மணை வரி, குடிநீர் உள்ளிட்ட கட்டணங்கள் ஆகியவற்றை முறையாக செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

திருவண்ணாமலை நகராட்சி முதல் நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக திருவண்ணாமலை நகராட்சி உள்ளது. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். இவ்வாறு ஆன்மிக பக்தர்கள் மற்றும் அனைத்து வகை பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி ஆதாரம் என்பது மிக முக்கியமாக ஒன்றாகும்.

அந்த வகையில் நகராட்சியின் வருவாய் வரவினங்களான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணங்கள் மற்றும் கடை வாடகை, குத்தகை தொகைகள் நீண்ட காலமாக முழுமையாக வசூலாகாமல் ரூ.46 கோடியே 59 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளது.

இந்த வருவாயை கொண்டுதான் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்கள், கட்டணங்கள், கடை வாடகை உள்ளிட்ட வசூல் ஆகாமல் இருந்து வருகிறது.

மேலும், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் வாடகை செலுத்தாமல் நீண்ட காலமாக உள்ளனர்.

நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் நிலுவையில் இருப்பதால் திருவண்ணாமலை நகராட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இயலாத நிலையில் இருந்து வருகிறது.

கடந்த 10-ந்தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு நகராட்சிகள் தனது வருவாய் இனங்களை 100 சதவீதம் வசூல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வசூல் செய்யப்படாத நகராட்சிகளுக்கு அரசின் எந்த திட்டமும் அனுமதிக்க முடியாது.

மேலும் 100 சதவீதம் வசூல் செய்யாத வருவாய் பிரிவு பணியாளர்கள் மட்டுமல்ல ஆணையாளர்கள், மண்டல இயக்குனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையான உத்தரவுகளை கலெக்டர் பிறப்பித்து உள்ளார்.

எனவே நகர வளர்ச்சி மற்றும் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் ஆன்மிக பக்தர்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி ஆதாரம் அவசியம் என்பதால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவையோடு நகராட்சி கருவூலத்தில் செலுத்தி நகர வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும்.

வரி செலுத்தாத வரிவிதிப்புதாரர்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், குத்தகை தாரர்கள் விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2022 1:05 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்