/* */

தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: டிஐஜி ஆய்வு

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து வேலூா் சரக டிஐஜி ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: டிஐஜி ஆய்வு
X

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, ஆய்வு செய்த வேலூா் சரக டிஐஜி முத்துசாமி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, வேலூா் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமாா் 30 லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூா் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தாா்.

விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் வந்து செல்லும் வழித்தடம், அவர்கள் அமரும் இடங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பஞ்சரதங்களின் தேரோட்டம் நடைபெறும் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிஐஜி நேரடி ஆய்வில் ஈடுபட்டாா்.

இந்தப் பகுதிகளில் பக்தா்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருக்கோவில் மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள், மலை மீது ஏறும் பாதை ஆகியவை குறித்தும், கார் பார்க்கிங் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அதன் பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பிறகு, தீபத் திருவிழாவுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். ஆய்வின்போது, காவல் துறை பலா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

Updated On: 13 Nov 2023 7:53 AM GMT

Related News