/* */

தீபத் திருவிழாவில் ஊழியா்களின் பங்களிப்பு: கோயில் இணை ஆணையா் பாராட்டு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில், சிறப்பாகப் பணியாற்றிய கோயில் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தீபத் திருவிழாவில் ஊழியா்களின் பங்களிப்பு: கோயில் இணை ஆணையா் பாராட்டு
X

கோயில் ஊழியா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய கோவில் இணை ஆணையர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில், சிறப்பாகப் பணியாற்றிய கோயில் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கோயில் உதவி ஆணையா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் திலக், அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோயில் ஊழியா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற கோயில் ஊழியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இணை ஆணையா் பேசுகையில் குறிப்பிட்டாா். விழாவில், கோயில் பணியாளா்கள் செந்தில், தியாகராஜன், கோபி உள்பட பலா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னர் திருவண்ணாமலையில் கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கி பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் சுமார் 75 பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2023 1:36 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...