/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸாா் ரயில் மறியல்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோந்த 350-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸாா் ரயில் மறியல்
X

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியைச் சோந்த 350-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனா்.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று மாலை திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் முன் நடைபெற்றது.

ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திருவண்ணாமலை ரயில் நிலையம் முன்பு திரண்டனர் . அவர்களை ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி நுழைவு வாயில் முன்பு தடுப்புகளை அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது.

மற்றொரு வாயில் முழுவதுமாக மூடப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சிறிது தூரத்தில் இருந்து மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் முழங்க காங்கிரஸாா் ஊர்வலமாக வந்தனர். நுழைவு வாயிலில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதை அடுத்து குறுக்கு வழியாக காங்கிரஸாா் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர் . இதனால் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் நீங்கள் செய்வது சரியில்லை, காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறிவிட்டு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறீர்கள் என காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமாரிடம் கேட்டார். இதனை அடுத்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தவர்களை வெளியில் வருமாறு மாவட்ட தலைவர் செங்கம் குமார் அழைத்தார் .ஆனால் யாரும் வரவில்லை, அப்போது திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலை காங்கிரஸ் தொண்டர்கள் ரயிலை மறித்தனர்.

சில தொண்டர்கள் தண்டவாளத்தில் படுத்தனர் .இதை அடுத்து காவல்துறையினர் ரயில் முன்பிருந்த அவர்களை அகற்றினர். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது. பிறகு மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸாா் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆரணி

ஆரணியை அடுத்த களம்பூா் ரயில் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் அண்ணாமலை தலைமையில் காட்பாடியில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரத் தலைவா்கள் பொன்னையன், பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் கோகுல்ராஜ், புகழ், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு 50 பேரை கைது செய்தனா்

Updated On: 16 April 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  2. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  4. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  7. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  8. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  9. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  10. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!