/* */

ஆட்சியர் செய்த ஏற்பாடு: ஐந்து நிமிடத்தில் தரிசனம், பக்தர்கள் மகிழ்ச்சி

கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பக்தர்கள் ஐந்து நிமிடத்தில் சாமி தரிசனம் செய்ய ஆட்சியர் ஏற்பாடு செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

ஆட்சியர் செய்த ஏற்பாடு: ஐந்து நிமிடத்தில் தரிசனம்,  பக்தர்கள் மகிழ்ச்சி
X

கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர்.

இந்நிலையில் பௌர்ணமி தினமான நேற்று முன்தினம் நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராஜகோபுரம் அருகே அவர் ஆய்வு மேற்கொண்ட போது , பொது தரிசன வரிசையில் ஏராளமான தாய்மார்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள் என பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக கோயில் ஊழியர்களை வரவழைத்து கியூ லைனில் காத்திருந்த தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை

ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கம்பத்து இளையனர் சன்னதி அருகே நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு அமர வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்களை சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மிக விரைவாக செய்தார்.

அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் அவர்களை நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய வழி ஏற்படுத்தி அவர்களோடு மாவட்ட ஆட்சியரும் சென்று அவர்களை ஐந்து நிமிடத்தில் சாமி தரிசனம் செய்ய வைத்து அவர்களை அனுப்பி வைத்தார். இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன , குடிநீர் வசதி, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கிரிவலப் பாதையில் 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கோவிலுக்குள் 100 இடங்களில் குடிநீர் குழாய், ஆறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோவிலுக்கு வரும் தாய்மார்கள் முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு நேரடியாக சாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தி அமர வைத்து உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் பௌர்ணமி நாட்கள், விடுமுறை நாட்களில் இதுபோன்று தனி வரிசை அமைத்து அவர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் அனைத்து பக்தர்களும் விரைந்து தரிசனம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் , அறங்காவலர்கள், திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்

Updated On: 27 Feb 2024 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  5. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு