/* */

ரமலான் திருநாளை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் தூய்மைப்பணி

திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு, தூய்மைப்பணி நடைபெற்றது

HIGHLIGHTS

ரமலான் திருநாளை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் தூய்மைப்பணி
X

தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை அருணை மேற்பார்வையாளர் எ.வ. வே.கம்பன் மற்றும் உறுப்பினர்கள்

திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு தூய்மை பணி நடைபெற்றது

ரமலான் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் கோரிமேடு தெரு ஈத்கா மைதானத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இப்பணியினை மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் தொடங்கி வைத்தார். சென்ற மாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர் அமைச்சரும் தூய்மை அருணை அமைப்பாளருமான எ.வ. வேலு, கலந்து கொண்டு தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் காலை 7 மணிக்கு திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை கோரி மேட்டு தெருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் எ.வ. வேலு ஆலோசனையின் படி ரமலான் திருநாளை முன்னிட்டு தூய்மை பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்த தூய்மை அருணை மேற்பார்வையாளர் எ.வ.வே.கம்பன், அவர்கள் அப்பகுதி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டார். இப்பணியில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகரக் கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

ஈத்கா மைதானத்தில் உள்ள குப்பைகள் , மண்மேடுகள் , முட்புதர்கள் என 5 லாரிக்கும் மேற்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. ஈத்கா மைதானம் சுத்தமானதைக் கண்டு முஸ்லிம் பெரியவர்கள் , அப்பகுதி பொதுமக்கள் தூய்மை காவலர்களுக்கு நன்றி தெரிவித்தும் தேநீர் அளித்தும் உபசரித்தனர்.

மேலும் வானக்காரத் தெரு, மத்தலாம் குளத்தெரு, மத்தலாம் குளத்தில் மெயின் ரோடு, முத்து விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை 4-வது வார்டு தூய்மை அருணை காவலர்களுடன் இணைந்து தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது.

Updated On: 17 April 2023 7:05 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை