/* */

அண்ணாமலையார் கோயிலில் சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயிலில் சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை
X

சித்ரா பவுர்ணமி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பார்வதி தேவி வரைந்த குழந்தையின் சித்திரம் மிக தத்ரூபமாக இருந்தது. சிவபெருமான் அந்த சித்திரத்தின் மீது தனது மூச்சுக் காற்றை படரச் செய்து சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். உயிர் பெற்ற குழந்தை தவழ்ந்ததைப் பார்த்து பார்வதி தேவியும் மகிழ்ந்தார். சித்திரத்தால் உருவானதால், அக்குழந்தை சித்திரகுப்தன் என அழைக்கப்பட்டார்.

அவ்வாறு சித்திர குப்தன்பிறந்த நாள் தான், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி திதி. பின்னர் அந்தக்குழந்தை பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனாக பிரம்மாவால் நியமிக்கப்பட்டார்' - இதுவே சித்ரா பவுர்ணமி உருவான வரலாறு என புராணங்கள் கூறுகிறன. அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சித்திரகுப்தருக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனி சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தன் தன் உதவியாளர் விசித்ர குப்தனுடன் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். தனிச் சந்நிதியில் அருள் புரியும் இவரை, பக்கவாட்டில் உள்ள சிறிய சாளரத்தின் வழியாக தரிசிக்க வேண்டும் என்பர்.

Updated On: 17 April 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்