/* */

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம்

அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம் மே 5 முதல் மே 14 வரை நடைபெறும். அய்யங்குளத்தில் தீர்த்தவாரி 14ம் தேதி நடைபெறும்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம்
X

திருவண்ணாமலை சித்திரை வசந்தோற்சவம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு உற்சவங்களில், சித்திரை மாத வசந்த உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் மிகவும் விமர்சையாக இந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம் .

அதன்படி ஸ்ரீ சுபகிருது வருடம் சித்திரை மாதம் 5.5.22 முதல் 14.5.22 வரை வசந்த உற்சவ விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இரவு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.. இதனைத்தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் மகிழ மரத்தினை பத்து முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஒவ்வொரு சுற்றில் மூன்று முறை பாவை என்று அழைக்கப்படுகின்ற பொம்மை அந்தரத்தில் மிதந்து வந்து தன் கையில் வைத்திருக்கும் பூக்கூடையில் இருந்து பல வாசனை மலர்களை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு காற்றில் மிதந்தபடி பூ போடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் .


மற்ற சிவாலயங்களில் கந்தர்வ பொம்மைதான் சுவாமிக்கு பூ போடுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணாமலையார் ஆலயத்தில் மட்டுமே சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டாள் நாச்சியார் அம்சமான பாவை என்கிற பெண் பொம்மை அண்ணாமலையார் மலர்களைத் தூவுவது கண்கொள்ளாக் காட்சியாக நிகழ்கிறது.

பொம்மை பூ போடும் நிகழ்வை பார்த்த குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இதனை பார்த்த குழந்தைகள் அனைவரும் ஆனந்தத்தில் கைதட்டி அண்ணாமலையாருக்கு அரோகரா என்று ஆரவாரம் செய்வார்கள்.

அதனை தொடர்ந்து அண்ணாமலையார் 10 முறை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெறும்.

முக்கிய நிகழ்வான அய்யங்குளத்தில் தீர்த்தவாரி 14 ஆம் தேதி நடைபெறும். அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Updated On: 1 May 2022 2:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்