/* */

ஆசிரியையிடம் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் திருட்டு

ஆசிரியையிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்து அவரது கணக்கில் ரூ.44 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

ஆசிரியையிடம் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் திருட்டு
X

திருவண்ணாமலை பாவாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி லதா ( 41), அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி இவர் கொசமடை தெரு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். கார்டு வைத்து பணம் எடுக்க முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் ஏ.டி.எம். இயந்திரத்தில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உதவுவது போன்று செயல்பட்டு லதாவின் கையில் இருந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி அதன் எண்ணை தெரிந்து கொண்டு கார்டு சரியாக வேலை செய்யவில்லை என்று அவரிடம் அந்த கார்டை கொடுப்பது போன்று வேறு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார்.

இதை அறியாத லதா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதை அடுத்து அந்த நபர் லதாவிடம் இருந்து பெற்ற ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.44 ஆயிரத்து 500 எடுத்துள்ளார். அது குறித்த குறுஞ்செய்தி லதாவின் செல்போனுக்கு வரவே ஏ.டி.எம்.கார்டை பார்த்தார். அப்போது தன்னிடம் உதவுவது போல் நடித்து வேறு கார்டை மாற்றிக்கொடுத்து விட்டு அந்த நபர் ரூ.44 ஆயிரத்து 500-ஐ திருடியது தெரிய வந்தது. இது குறித்து திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் லதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் லதாவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றியது திருவண்ணாமலை அரடாபட்டு பகுதியை சேர்ந்த பிரதீப் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.


Updated On: 13 July 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...