/* */

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மகாதீபத்தை முன்னிட்டு இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
X

அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாவது நாளான இன்று அதிகாலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு தீப மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை சரியாக நான்கு மணிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அநேகனாகும் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றப்பட்ட தீபம் கொண்டு வரப்பட்டு ஐந்து தனித்தனி மடக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன.

சிவாச்சாரியர்கள் பரணி தீபத்தை எடுத்துக் கொண்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு கொண்டு சென்ற பின் பக்தர்கள் தரிசனத்துக்காக கொடிமரத்தின் அருகில் தீபத்தை கொண்டு வந்தனர். பரணி தீபத்தை தரிசனம் செய்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

Updated On: 19 Nov 2021 12:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?