/* */

அருணாசலேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அலங்காரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அலங்காரம்
X

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காலபைரவர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் அருகில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பவுர்ணமியை அடுத்த வரும் அஷ்டமி திதியில் மகா கால பைரவரை வணங்குவது மிகவும் விசேஷமானது என்று கருதப்படுகிறது.

நேற்று தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால், இரவு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு பச்சரிசிமாவு, அபிஷேக பொடி, மஞ்சள், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் முந்திரி மற்றும் வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீ மகா கால பைரவருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 27 March 2022 2:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...