/* */

64 ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்: பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை பாண்டீஸ்வரர் கோயிலில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு மண்டகப்படி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

64 ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்: பக்தர்கள் மகிழ்ச்சி
X

பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்.

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அக்னி லிங்கத்திற்கு பக்கத்தில் உள்ள பாண்டீஸ்வரர் கோயிலில் 64 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சலேஸ்வரரை கொண்டு சென்று அங்கு அவருக்கு மண்டகப்படி நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன.

கோவில்களைக்கட்டும் போதே அருகில் குளம் ஒன்றை வெட்டும் பழக்கத்தை நமது மூதாதையர்கள் வைத்திருந்தனர்.

தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அந்த குளத்தில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வழிபாடு செய்ய உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோவில் அருகிலேயே திருக்குளங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆலயங்கள் அருகில் மகிமை மிக்க தீர்த்தங்கள் இருப்பது நமது சாஸ்திரங்கள், புராணங்கள் மூலம் தெரிய வந்தது. முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் இந்த தீர்த்தங்களை உருவாக்கி, அதில் நீராடி, வழிபட்டு உரிய பலன்களைப் பெற்று இருப்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மலை மீதும் மற்றும் நகரைச் சுற்றி நாலாபுறமும் இந்த 360 தீர்த்தங்களும் இருந்தன. ஒரு நிமிடம் அந்த 360 தீர்த்தங்களும் திருவண்ணாமலையைச் சுற்றி அமைந்திருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.... எவ்வளவு பசுமையாக இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே பிரமாண்டமாக தோன்றுகிறது அல்லவா?

ஆனால் புராணங்களில், தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன.

ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி சில தீர்த்தங்கள் மட்டும் இப்போதும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகின்றன.

சில தீர்த்தங்கள் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்வது போல இந்த தீர்த்தத்தை தினமும் காலையில் மனதில் நினைத்தாலே போதும் அந்த தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

பாண்டவர் தீர்த்தம், ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அக்னி தீர்த்தத்திற்கு பக்கத்தில் உள்ள அக்னி லிங்கம் செல்லும் பாதையில் அக்னி லிங்கத்திற்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த பாண்டீஸ்வரர் கோயில். பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள பாண்டவர் தீர்த்தம் மிகவும் புனிதமானது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திருவுடல் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின்போது சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதை எடுத்து அம்மனை மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அருணாச்சலேஸ்வரரை குமர கோயிலுக்கு கொண்டு சென்று அங்கு இரவு முழுவதும் தங்க வைக்கப்படுவார்.

திருவுடல் விழா முடிந்த பிறகு மறுநாள் கிரிவலம் செல்லும் போது பாண்டீஸ்வரர் கோயிலில் பாண்டவர் தீர்த்தத்தில் இருந்து அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். காலப்போக்கில் பாண்டவர் தீர்த்தம் மலை அடிவாரம் என்பதால் அந்தப் பாதை சுவாமி செல்ல ஏற்றவாறு இல்லாமல் போனது. பாண்டீஸ்வரர் கோயிலுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சுவாமியின் பாதுகாப்பு கருதி குமர கோவிலில் அருணாச்சலேஸ்வரரை இறக்கி வந்ததாக சிவாச்சாரியார்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதியை சேர்ந்த 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் முயற்சியால் ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோயில் ரூபாய் 1 கோடியில் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருவதற்கு ஏற்றார் போல் சிறப்பாக சாலைகள் அமைக்கப்பட்டதால் பழமையை போற்றி மீண்டும் அருணாச்சலேஸ்வரரை பாண்டவர் தீர்த்தம் பாண்டீஸ்வரர் கோயிலுக்கு எழுந்து அருள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் முயற்சியால் அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பாண்டீஸ்வரர் கோயிலுக்கு அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளினார்.

அங்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சிவாச்சாரியார் சங்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் மண்டகப்படி நடத்தினர்.

இந்த சிறப்பான நிகழ்வில் ரமணாஸ்ரமத்தின் தலைவர் ஆனந்தன், நிர்வாக மேலாளர்கள் கிருஷ்ணன், ஹரி , ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தின் நிர்வாகி லாயர் சந்திரமோகன், அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், ராம பெருமாள், 25 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பான நிகழ்வால் அண்ணாமலையார் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பாண்டீஸ்வரர் கோயிலுக்கு அருணாச்சலேஸ்வரர் மண்டகப்பிடி செய்வதற்கு அனுமதி அளித்த அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர்களுக்கும், இணை ஆணையர் மற்றும் அலுவலர்களுக்கும், நகர மன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 18 Jan 2024 1:49 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்