/* */

ரதசப்தமியையொட்டி அண்ணாமலையாா் தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது.

HIGHLIGHTS

ரதசப்தமியையொட்டி அண்ணாமலையாா் தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு
X

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் செய்யாற்றில் எழுந்தருளிய அண்ணாமலையார் மற்றும் திமுமாமுடீஸ்வரா்

ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரா் சுவாமிக்கும் தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு, கலசப்பாக்கம் செய்யாற்றில் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவையொட்டி, திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையாா் சிறப்பு அலங்காரத்தில் செய்யாற்றிற்கு தேரில் புறப்பட்டாா். துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் வழியாக வந்த சுவாமிக்கு அந்த கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா்.

தனது நிலத்திற்கு சென்ற அண்ணாமலையார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 147 ஏக்கர் நிலமும் 38 ஏக்கர் ஏரி ஒன்றும் திருவண்ணாமலை போளூர் ரோடு நாயுடு மங்கலம் அருகே உள்ள தனகோட்டி புரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை அண்ணாமலையார் வருகை தந்து பார்வையிடுவது வழக்கம். அப்போது அவரிடம் வரவு செலவு கணக்கு படித்துக் காட்டப்படும்.

அதன்படி நேற்று ரதசப்தமியொட்டி தனகோட்டி புரத்தில் உள்ள தனது நிலத்திற்கு உண்ணாமலையார் சமேத அண்ணாமலையார் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு சென்று தனகோட்டி புரத்தில் எழுந்தருளினார்.

தனகோட்டிபுரம் கிராம மக்கள் அண்ணாமலையாரை அவருடைய நிலத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடத்தில் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பெண்கள் அண்ணாமலையாருக்கு பொங்கல் படையல் இட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் வரவு செலவு கணக்கு படிக்கப்பட்டது.

இந்த நிலத்தில் கிடைக்கும் அரிசி அண்ணாமலையார் கோயில் அன்னதான திட்டத்திற்கும் வைக்கோல் கோசாலையில் உள்ள மாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடா்ந்து, செய்யாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாா் சுவாமி, கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திமுமாமுடீஸ்வரா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். விழாவில், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், வில்வாரணி, மோட்டூா், எலத்தூா், தென்பள்ளிப்பட்டு, பூண்டி, வன்னியனூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On: 17 Feb 2024 1:02 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்